தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முதல்வர் வருகையால் போக்குவரத்து மாற்றம் டிரோன் இயக்க தடை

முதல்வர் வருகையால் போக்குவரத்து மாற்றம் டிரோன் இயக்க தடை

முதல்வர் வருகையால் போக்குவரத்து மாற்றம் டிரோன் இயக்க தடை


ADDED : செப் 29, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 04:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தமிழக முதல்வர் இன்று வருகை தருவதை முன்னிட்டு, மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளிலிருந்து, மாநகருக்கு உள்ளே வரும் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நீலம்பூரிலிருந்து சின்னியம்பாளையம், விமான நிலையம் வழியாக நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களும், நீலாம்பூர் பகுதியிலிருந்து வரும் இலகுரக வாகனங்களும் நீலம்பூர் எல் அண்ட் டி புறவழிச்சாலை வழியாக திரும்பி, சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர் மற்றும் சிங்காநல்லூர் வழியாக மாநகருக்குள் வர வேண்டும்.

மாநகரிலிருந்து அவிநாசி சாலை வழியாக, வெளியே செல்லும் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், லட்சுமி மில்ஸ் சந்திப்பில் ‘யூ -டர்ன்’ செய்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் அண்ட் டி புறவழிச்சாலையை அடைந்து செல்லலாம்.

அதேபோல் அவிநாசி ரோடு வி.கே.ரோடு வழியாக வரும் இலகுரக வாகனங்கள்,  மசக்காளிபாளையம் ரோடு வழியாகவும், ஹோப்ஸ் வழியாக வரும் வாகனங்கள், டைடல் பார்க் சந்திப்பில் ‘யூ- டர்ன்’ செய்து காமராஜர் ரோடு வழியாகவும், சிங்காநல்லூர் சென்று பயணத்தை தொடரலாம்.

காளப்பட்டி சந்திப்பிலிருந்து,  சிட்ரா- அவிநாசி ரோட்டுக்கு வரும் கனரக வாகனங்கள் , தொட்டிப்பாளையம் வழியாக செல்ல வேண்டும். கோல்டுவின்ஸ் ரோட்டில் இருந்து அவிநாசி ரோட்டுக்கு வர வேண்டிய கனரக வாகனங்கள், ஹவுசிங் யூனிட் ரோடு, மாருதி பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி,  வீரியம்பாளையம் ரோடு வழியாக காளப்பட்டி சந்திப்பை அடையலாம்.

முதல்வர் வருகையையொட்டி, விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வரவும், இறக்கிவிடவும் வரும் வாகனங்கள் மற்றும் வாடகை கார்கள் வழக்கமான பயண நேரத்திற்கு, 30 நிமிடங்களுக்கு முன்பாகவே, வந்து சேர வேண்டும். விமான நிலைய வளாகத்திற்குள் வாடகை கார்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த அனுமதி இல்லை. 

காலை 7.00 முதல் இரவு 9.00 மணி வரை மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us