ADDED : டிச 10, 2025 09:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து மோகன் நகர் அருகே தனியார் பள்ளி செயல்படுகிறது. இதன் பின்புறம் செல்லும் ஓடையில், நேற்று அதிகாலை இரு யானைகள் காணப்பட்டன. வனத்துறையினர் யானையை விரட்டினர்.
ஓடையை ஒட்டிய வனப்பகுதிக்குள் சென்ற யானைகள், வெளியேறாமல் சுற்றி வந்தன. வெளிச்சம் வந்ததையடுத்து, 20 பேர் யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினரிடம் விசாரித்தபோது, இரு யானைகளும் நேற்று முன்தினம் இரவு மதுக்கரை வனப்பகுதியிலிருந்து பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளன. மீண்டும் வனத்திற்குள் விரட்டியபோது, போக்கு காட்டி, குரும்பபாளையம் வந்துள் ளன. இரவு யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணி மீண்டும் துவங்கியது.

