/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சபரீச சேவா சங்கம் சார்பில் பதினோராம் ஆண்டு விழா
/
சபரீச சேவா சங்கம் சார்பில் பதினோராம் ஆண்டு விழா
ADDED : ஜன 09, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;சபரீச சேவா சங்கம் சார்பில் பதினோராம் ஆண்டு விழா, ஸ்ரீ தர்ம சாஸ்தா மஹோற்சவம் கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் சாலையிலுள்ள மண்டபத்தில் நடந்தது.
மஹோற்சவத்தில் காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் தன்வந்திரி ஹோமம் சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், திருஷ்டி துர்கா யோகா ஹோமம் ஆகியவை நடந்தன. அதை தொடர்ந்து, சுவாமி ஐயப்பன் உருவ சிலைக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹர புத்திர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி ஐயப்பனின் அருளை பெற்றனர்.