/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு முக்கியத்துவம்
/
மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு முக்கியத்துவம்
ADDED : பிப் 17, 2024 02:17 AM
கோவை:கோவை மாநகராட்சியில் தயாரிக்கப்படும், 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுரை வழங்கியுள்ளார்.
மத்திய - மாநில அரசுகள் தாக்கல் செய்வதுபோல், ஒவ்வொரு நிதியாண்டும், உள்ளாட்சி அமைப்புகளிலும் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும். கோவை மாநகராட்சியில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதியில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
நடப்பாண்டு லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால், அதற்கு முன்னதாக, தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில், பிப்., இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதனால், கோவையிலும் நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் பணியை வேகப்படுத்த, கணக்கு பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, துறை தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது செய்து வரும் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட, அனைத்து தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கல்விக்கும், மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் தயாரிக்க, துறை தலைவர்களுக்கு கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார்.