UPDATED : நவ 03, 2026 04:41 PM
ADDED : நவ 03, 2026 04:37 PM
வால்பாறை: வால்பாறையில் கூடுதலாக நடமாடும் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும், என, அ.தி.மு.க., தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் அமீது, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, 14 கோடியே 55 லட்சம் ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் பணம் எடுக்க வால்பாறை நகருக்கு வரும் தொழிலாளர்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, வால்பாறை ஸ்டேட் பேங்க் சார்பில் உள்ள நடமாடும் ஏ.டி.எம்., போன்று, இந்தியன் பேங்க, யூனியன் பேங்க் சார்பிலும், நடமாடும் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் பண்டிகை காலம் முடியும் வரை, வால்பாறை நகரில் கூடுதல் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
