UPDATED : நவ 02, 2026 06:59 PM
ADDED : நவ 02, 2026 06:57 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முறையாக போனஸ் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஒப்பந்ததாரர், போராட்டம் நடத்திய பணியாளர்களுடன் பேச்சு நடத்தினர். அதில், சமரசம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
நகராட்சியில் போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக த.வெ.க.,வினர் பங்கேற்று ஒப்பந்ததாரரிடம் பேச்சு நடத்தினர். இதில், இரண்டு கோஷ்டியாக வந்து, ஒவ்வொரு தரப்பும் பேச்சு நடத்தியதுடன், துாய்மை பணியாளர்களுடன் பேசினர். ஒரு சிலர் துாய்மை பணியாளர்களுடன் பேசுவதை வீடியோ, போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுவதில் ஆர்வம் காட்டினர்.
