ADDED : ஆக 14, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, உப்பிலிபாளையம், கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் சதீஷ்; கோவையில் உள்ள எல் அண்டு டி கட்டுமான நிறுவனத்தில், நிர்வாக பிரிவு இன்ஜினியராக பணியாற்றியபோது, பொக்லைன் இயந்திரம் வாங்கியதில், 48 லட்சம் ரூபாய் கையாடல் செய்தார்.
காட்டூர் போலீசார் விசாரித்து, 2013, ஜூலை 24ல், சதீஷை கைது செய்தனர். அவர் மீது, கோவை ஜே.எம். 2, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்க்கு, இரண்டு ஆண்டு சிறை, 30,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.