UPDATED : அக் 24, 2026 03:05 PM
ADDED : அக் 24, 2026 03:02 PM
அ நிறம் | அளவு
கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், இபிஎப்ஓ திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் வர்த்தக சபை கட்டடத்தில் நடந்தது.
இபிஎப்ஓ கமிஷனர் ஸ்வாகதா ராய் உள்ளிட்ட அதிகாரிகள், தொழில் அமைப்பினர் கலந்து கொண்டனர். இபிஎப்ஓ.,வின் சமீபத்திய மாற்றங்கள், திட்டங்கள், விதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
இபிஎப்ஓ திட்டத்தில் இல்லாத ஊழியர்களை, இணைக்க வருகிற 31ம் தேதி வரை ய்ப்பு வழங்கப்படுகிறது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.
இபிஎப்ஓ மாத உச்சவரம்பு ரூ.15,000ல் இருந்து, ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பி.எம். விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தில், தகுதியுடைய பணியாளர்கள், நிறுவனங்களுக்கு நிதிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
