/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எப்போ வருவாரோ' சொற்பொழிவு: கிக்கானி பள்ளியில் இன்று துவக்கம்
/
'எப்போ வருவாரோ' சொற்பொழிவு: கிக்கானி பள்ளியில் இன்று துவக்கம்
'எப்போ வருவாரோ' சொற்பொழிவு: கிக்கானி பள்ளியில் இன்று துவக்கம்
'எப்போ வருவாரோ' சொற்பொழிவு: கிக்கானி பள்ளியில் இன்று துவக்கம்
ADDED : ஜன 01, 2024 12:30 AM
கோவை:ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின், 'எப்போ வருவாரோ' 2024 நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில், 18வது ஆண்டாக இன்று மாலை 6:30 மணிக்கு துவங்குகிறது.
ஆன்மத்தேடலின் விடையாகவும் ஆண்டவன் அருளும் கொடையாகவும் ஆண்டுதோறும், 'எப்போ வருவாரோ' நிகழ்ச்சியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தி வருகிறது.
2024 புத்தாண்டில் இந்நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. மாலை 6:30 மணிக்கு பாம்பன் சுவாமிகள் பற்றி பாரதிபாஸ்கரும், நாளை வள்ளலார் பற்றி ஸ்ரீகிருஷ்ணஜகன்நாதனும் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.
ஸ்ரீராமானுஜர் பக்தர் பேரவை செயலாளர் திருமூர்த்தி, அண்ணாமலையார் திருக்கோவில் செயலாளர் தனம் என்கிற வெங்கிட்டம்மாள் ஐங்கரன் ஆகியோருக்கு, அருள்வளர் செம்மல் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சிகளை, மகேஸ்வரி சத்குரு தொகுத்து வழங்குகிறார். மரபின்மைந்தன் முத்தையா ஒருங்கிணைக்கிறார். அன்றாடம் மாலை 6:00 மணி முதல் 6:30 வரை அருளிசையும், அதன்பின் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.