/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரியில் மதிப்பீட்டு கல்வி மாநாடு
/
சங்கரா கல்லுாரியில் மதிப்பீட்டு கல்வி மாநாடு
ADDED : மார் 26, 2025 10:28 PM
கோவை:
சங்கரா பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் கோவை ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை இணைந்து, வரும் ஏப்., 4, 5ம் தேதிகளில் மதிப்பீட்டு கல்வி குறித்த, தேசிய மாநாட்டை நடத்துகின்றன.
மாநாட்டை, எஸ்.வியாசா நிகர்நிலை பல்கலையின் தலைவர் நாகேந்திரா துவக்கி வைக்கிறார். சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டின் முக்கிய அம்சமாக, மதிப்பீட்டு கல்வியின் அணுகுமுறைகள், சிறந்த நடைமுறைகள், தொழில்நுட்பத்தின் பங்கு, மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.
மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் பார்வை மற்றும் கண்டுபிடிப்புகளை பகிரவுள்ளனர். சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கான பரிசுகளும் வழங்கப்படும் என்கிறார் முதல்வர் கணேஷ்.
மாநாட்டில் பங்கேற்க விரும்புபவர்கள், www.sankara.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநாடு குறித்த விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.