/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.வி.எம். செயல்முறை விளக்க மையம்
/
இ.வி.எம். செயல்முறை விளக்க மையம்
ADDED : ஜன 23, 2026 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,சட்டசபை தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான செயல்முறை விளக்க மையம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது போன்ற செயல்முறைகள் பொதுமக்களுக்கு விளக்கப்படுகின்றன. மேலும், 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாகனங்கள் மூலம் வாக்களிக்கும் முறைகள் குறித்து விளக்கப்படவுள்ளன,' என்றனர்.

