/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்வு விடைத்தாள் முகப்பு தைப்பு பணி
/
தேர்வு விடைத்தாள் முகப்பு தைப்பு பணி
ADDED : பிப் 22, 2024 06:06 AM

கோவை: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், விடைத்தாள் தைப்பு பணிகள், அந்தந்த மையங்களில் நடந்து வருகின்றன.
பிளஸ்2 மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதலும், பிளஸ்1 மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி முதலும் தேர்வுகள் துவங்கவுள்ளன. கோவையில், 363 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 127 மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர். பிளஸ்1 தேர்வை 35,975 மாணவர்களும், பிளஸ்2 தேர்வை 33,659 மாணவர்களும் எழுதவுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும், அந்தந்த மையங்களுக்கான விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த விடைத்தாளில், முகப்பு பக்கங்கள், வரலாறு பாடத்திற்கு 'மேப்', கணிதத்திற்கு 'கிராப்' உள்ளிட்டவற்றை சேர்த்து தைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.