/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேராசிரியர்களை கொண்டாடி மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
/
பேராசிரியர்களை கொண்டாடி மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
பேராசிரியர்களை கொண்டாடி மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
பேராசிரியர்களை கொண்டாடி மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
ADDED : பிப் 19, 2024 01:14 AM

கோவை;அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரியின், டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறையின் முன்னாள் மாணவர் சங்கத்தினர், மூத்த பேராசிரியர்களான கிருஷ்ணமூர்த்தி மற்றும் குரேசி ஆகியோரின், நுாற்றாண்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அவிநாசி ரோடு, ஜென்னிஸ் கிளப்பில் நடந்த நிகழ்வில், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர், மூத்த பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, குரேசி ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில், உருவாக்கப்பட்ட புத்தகத்தை வெளியிட்டார்.
முன்னாள் மாணவ சங்கத்தினர் கூறுகையில், 'தேசியளவில் டெக்ஸ்டைல் கல்வியில், அழகப்பா தொழில்நுட்பக் கல்லுாரியை, முக்கிய இடத்திற்கு கொண்டு சென்றதில் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் பங்கு முக்கியமானது. பேராசிரியர் குரேஷி, பாடத்தை எளிமையாக கற்பிப்பதில் ஆற்றல் கொண்டவராக இருந்தார்' என்றனர். பேராசிரியர்களின் குடும்பத்தினர், முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் வேலுசாமி, துணை தலைவர் அமர்நாத் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

