UPDATED : நவ 20, 2026 06:58 PM
ADDED : நவ 20, 2026 06:58 PM

கோவை: ஸ்ரீ ஈஸ்வர் என்ஜினீயரிங் கல்லுாரியின் செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் துறை சார்பில் மாணவர்களின் படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி நடந்தது. துறை தலைவர் சுமதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா மோகன்ராம் துவக்கி வைத்து சிறந்த படைப்புகளுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ்கள், பரிசு கோப்பை வழங்கினார்.
கண்காட்சியில் பல துறைகளை சேர்ந்த 150 கண்டு பிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். ரோபோ மிராக்கிள், ஒய்.ஓ.ஐ ரோபாட்டிக்ஸ் நிறுவன வல்லுனர்கள், செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் துறை பேராசிரியர்கள் மதிப்பீடு செய்ததுடன் ஆலோசனை வழங்கினர்.
இதில் கல்வி பிரிவு டீன் சுரேஷ், கணினி அறிவியல் துறை டீன் சுபா, வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் அருண் ஜெகநாதன், உதவி பேராசிரியர் சுகன்யா, கவுரிசங்கர், துறை தலைவர், பேராசியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
