/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் - கரூர் இடையே புதிய ரயில் பாதை எதிர்பார்ப்பு
/
போத்தனுார் - கரூர் இடையே புதிய ரயில் பாதை எதிர்பார்ப்பு
போத்தனுார் - கரூர் இடையே புதிய ரயில் பாதை எதிர்பார்ப்பு
போத்தனுார் - கரூர் இடையே புதிய ரயில் பாதை எதிர்பார்ப்பு
ADDED : மார் 21, 2026 06:59 AM
சென்னை: போத்தனுாரில் இருந்து பல்லடம், காங்கேயம் வழியாக கரூருக்கு, புதிய ரயில் பாதை அமைக்க கோரி, சேலம் ரயில் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில் கோட்டம் டி.ஆர்.யு.சி.சி., உறுப்பினர் சுப்பிரமணியன் கூறியதாவது:
ரயில்வே பல்வேறு புதிய ரயில் பாதைகள் திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில், ஈரோடு - பழனி ; மதுரை - துாத்துக்குடி உட்பட, பல்வேறு வழித்தடங்களில், இறுதி கட்ட ஆய்வுப் பணிகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், போத்தனுாரில் இருந்து, பல்லடம் காங்கேயம், வெள்ளக்கோவில் வழியாக கரூருக்கு, புதிய பாதை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஏற்கனவே, போத்தனூர் - செட்டிபாளையம் ரயில் பாதை உள்ளது. இந்த பாதை, பொள்ளாச்சிக்கு செல்லும் பாதையில், செட்டிபாளையத்தில் இருந்து, பல்லடம், காங்கேயம் வெள்ளக்கோயில் வழியாக, கரூருக்கு பாதை அமைத்தால் போதுமானது. இந்த பாதை அமைத்தால், பயணியர் அதிகளவில் செல்வர். மேலும், அந்த பகுதிகளில் இயங்கி வரும் பஞ்சாலை, மாட்டு தீவனம் கோழி தீவனம், விவசாயப் பொருட்கள் உற்பத்தி செய்து, வியாபாரம் செய்து வருவோருக்கு, மிக உதவியாக இருக்கும்.
பொருட்களை ஓரிடத்திலில் இருந்து, மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வதற்கு, ரயில் சரக்கு பெட்டி சுலபமாக இருக்கும். இதனால் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களின், சரக்கு சேமிப்பு கிடங்கு, செட்டிபாளையம் பகுதியில் தான் அமைந்துள்ளது. இந்த பாதை அமையும் பட்சத்தில், அது அவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

