/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையில் பதிவாளர் நியமனத்தில் விதிமீறல் தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
/
பாரதியார் பல்கலையில் பதிவாளர் நியமனத்தில் விதிமீறல் தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
பாரதியார் பல்கலையில் பதிவாளர் நியமனத்தில் விதிமீறல் தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
பாரதியார் பல்கலையில் பதிவாளர் நியமனத்தில் விதிமீறல் தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
ADDED : மார் 21, 2026 07:00 AM
கோவை: பாரதியார் பல்கலையில் பதிவாளர் நியமனத்தில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலையில் கடந்த 9 ஆண்டுகளாக பதிவாளர் பணியிடம் காலியாகவே இருந்தது. இதை நிரப்புவதற்காக கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. மொத்தம் 16 பேர் விண்ணப்பித்த நிலையில், 5 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதியானவர்களுக்கு சென்னையில் நேர்காணல் நடந்தது.
இந்த நேர்காணலை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்வுக்குழுவில் விதிகளுக்கு முரணாக உறுப்பினர்கள்இடம்பெற்றதால் யு.ஜி.சி., விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பேராசிரியர் இளஞ்செழியன் கூறுகையில், ''பதிவாளர் நியமன விதிகளின்படி, தேர்வுக்குழுவில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆனால், துணைவேந்தர் பொறுப்புக்குழு, ஆட்சிக்குழு மற்றும் நியமன உறுப்பினர்கள் என 5 பேர் கொண்ட அந்த குழுவில் பட்டியலினத்தவர் யாரும் இல்லை.
உரிய பிரதிநிதித்துவம் இல்லாத குழுவால், சமூக நீதிக்கு எதிராக இந்த நியமனம் நடக்கிறது. இது தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.
இந்த புகாரை ஏற்ற தேசிய பட்டியலின ஆணையம் உண்மை விவரங்களை விசாரித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, 'பல்கலைக்கழக விதிமுறைகளின் படியே பதிவாளர் நியமனம் முறையாக நடந்தது' என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், தங்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

