/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
/
கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 18, 2025 10:17 PM
வால்பாறை ; வால்பாறையில், கூடுதலாக நடமாடும் ஏ.டி.எம்., கொண்டு வர வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் பணிபுரியும் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, மாதம் தோறும், 7 மற்றும், 10 தேதிகளில் சம்பளம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு, கடந்த ஆறு ஆண்டுகளாக வங்கிகள் வாயிலாக சம்பளம் வழங்கப்படுகிறது.
எஸ்டேட் பகுதியில், ஏ.டி.எம்., இல்லாத நிலையில், வால்பாறை நகரில் உள்ள ஏ.டி.எம்.,களுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து, தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, வால்பாறை ஸ்டேட் பேங்க் சார்பில், கடந்த நான்கு ஆண்டுகளாக நடமாடும் ஏ.டி.எம்., வாகனம் இயக்கப்படுகிறது. ஆனால், பிற வங்கிகளின் சார்பில் நடமாடும் ஏ.டி.எம்., வாகனம் இது வரை கொண்டு வரவில்லை. இதனால், தொழிலாளர்கள் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க முடியாமல் மாதம் தோறும் சிரமப்படுகின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்வதால், விடுமுறை நாட்களில் வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க முடிவதில்லை. ஸ்டேட் பேங்க் சார்பில் நடமாடும் ஏ.டி.எம்., வாகனம் இயக்கப்படுகிறது. இதே போல் மற்ற பேங்க்குகள் சார்பிலும், எஸ்டேட் பகுதிகளுக்கு, 7ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும் நடமாடும் ஏ.டி.எம்., வாகனம் இயக்கினால், தொழிலாளர்கள் பயன்பெற முடியும். இவ்வாறு, கூறினர்.