/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமம்தோறும் உலர்களம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கிராமம்தோறும் உலர்களம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 06, 2024 01:41 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை வட்டாரத்தில், தென்னை, பாக்கு மற்றும் மானாவாரி சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. சீசன் காலங்களில், விளைபொருட்களை உலர வைத்து இருப்பு வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'விளைபொருட்களை உலர வைத்து இருப்பு வைக்க,தேவையான உலர்களங்கள் கிராமங்களில் இல்லை. சிறு, குறு விவசாயிகள், அதிக செலவு செய்து, ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்குகொண்டு சென்று உலர வைக்க வேண்டிய நிலை உள்ளது.
சில கிராமங்களில் வேளாண் விற்பனை வாரியம் சார்பிலும், நீர்வள நிலவள திட்டத்திலும்உலர்களங்கள் கட்டப்பட்டன.சரியான பராமரிப்பு இல்லாமல், உலர்களங்கள் உருக்குலைந்துள்ளன. எனவே, கிராமங்கள் தோறும் பொது இடங்களில்உலர்களம் அமைக்க வேண்டும்,' என்றனர்.