/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சுற்றுச்சூழலை பாதுகாக்க அளவா பட்டாசு வெடிங்க'
/
'சுற்றுச்சூழலை பாதுகாக்க அளவா பட்டாசு வெடிங்க'
ADDED : அக் 25, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: விபத்து, ஒலி மற்றும் காற்று மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை மாசுபடுகின்றன. அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயோதிகர்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஆகவே கோர்ட் அறிவுறுத்தியுள்ளபடி, தீபாவளியன்று காலை 6:00 முதல் 7:00 மணி வரையும், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே, குறைந்தளவில் பட்டாசு வெடிக்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.