/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி ஆவணம் தயார் செய்து 6 கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு
/
போலி ஆவணம் தயார் செய்து 6 கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு
போலி ஆவணம் தயார் செய்து 6 கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு
போலி ஆவணம் தயார் செய்து 6 கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு
ADDED : அக் 19, 2024 06:36 AM
கோவை : போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை மோசடி செய்த ஐந்து பேர் மீது, மாநகர குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை பெரிய கடை வீதி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் (பாரத் பெட்ரோல் பங்க்) செயல்பட்டு வருகிறது. நஞ்சப்பா ராவ் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, குத்தகைக்கு எடுத்து பங்க் நடத்தி வருகின்றனர்.
இங்கு 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த சர்புதீன், 50 என்பவர், சுமார், ரூ. 7 லட்சம் கையாடல் செய்துள்ளார்.
இதனால் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இதையடுத்து, அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, போலி பட்டா தயார் செய்து, தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.
இடத்தை தனது சகோதரர் அப்துல் சலீம், 46 மற்றும் வேறு இருவர் பெயரிலும் பத்திரப்பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக பெட்ரோல் பங்க் மேலாளர் பைசல், 40 கோவை மாநகர குற்றப்பிரிவு (நில அபகரிப்பு தடுப்பு பிரிவு) போலீசில், புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக, கோவையை சேர்ந்த சர்புதீன், 50, அப்துல் சலீம், 46, எட்வின் ஆன்டனி, கோபால்சாமி மற்றும் திருப்பத்துாரை சேர்ந்த கழகரசு ஆகியஐந்து பேர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, சுமார் ரூ. 6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.