/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 02, 2025 11:03 PM
கோவை;கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025---26ம் கல்வியாண்டில், முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச கல்வி தகுதியாக, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 3 வருட பட்டயப்படிப்பு (டிப்ளமோ) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள், www.tncu.tn.gov.in வழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பெறப்படும் விண்ணப்பங்களை தேர்வு குழுவிற்கு சமர்ப்பித்து, தேர்வு செய்யப்படும் மாணவர்கள், பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
பயிற்சியில் சேர, 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மாணவர்களின் வருகை பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே, 100 சதவீதம் பதிவு செய்யப்படும்.
ஒரு பருவத்துக்கு குறைந்தபட்சம், 80 சதவீதம் வருகை பதிவு இருந்தால் மட்டுமே இறுதி தேர்வு எழுத இயலும்.
புதிய பாடத்திட்டத்தின்படி, கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி ஒரு வருட கால பயிற்சியாக, இரண்டு பருவ முறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விபரங்களுக்கு, கோவை சாய்பாபா மிஷன், அழகேசன் ரோட்டில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கீதா தெரிவித்துள்ளார்.