/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் பறிப்பு
/
கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் பறிப்பு
ADDED : ஏப் 28, 2025 05:40 AM
போத்தனூர் : கோவை கரும்புக்கடை, பள்ளி வீதியை சேர்ந்தவர் ஹாஸன், 27. கடந்த மூன்று நாட்களுக்கு முன் பாலக்காடு சாலை, டி.டி.எஸ்.காலனி அருகே நடந்து சென்றார். மூவர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, ரொக்கம், 2,500. ஆறு கிராம் தங்க நகை ஆகியவற்றை பறித்து தப்பியது.
ஹாஸன் புகாரில் கரும்புக்கடை போலீசார் விசாரித்து, குனியமுத்தூர், சுண்ணாம்பு காளவாய், காயிதே மில்லத் காலனியை சேர்ந்த சாதிக் அலி, 20, ராஜு நாயக்கர் தோட்டத்தை சேர்ந்த முஹமது சமீர், 21, பிரின்ஸ் கார்டனை சேர்ந்த முஹமது நிஜாம், 21 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆறு கிராம் தங்க நகை, 500 ரூபாய், கார் மற்றும் மூன்று கத்திகளை பறிமுதல் செய்தனர்.