UPDATED : நவ 10, 2026 09:29 AM
ADDED : நவ 10, 2026 09:26 AM
கோவை: வடமாநிலங்களில் சத் பூஜை, 13 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சேலம் கோட்ட ரயில்வே துறை பல்வேறு வசதிகளை செய்துள்ளது.
ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களுடன் கூடுதலாக போத்தனுாரில் இருந்து பீகார் பரவுனி, தர்பங்கா ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகை, கூட்ட நெரிசல் கண்காணிக்கப்பட்டு, தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுகின்றன.
ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் காத்திருப்பு இடங்கள், ரயில்கள் ஏறும் முறை முறைப்படுத்துதல், முன்பதிவில்லா பெட்டிகளுக்கு செல்ல வழிகாட்டுதல், முன்பதிவு பெட்டிகளில் தவறுதலாக ஏறியவர்களை இறக்கி முன்பதிவில்லா பெட்டிகளுக்கு செல்ல வைத்தல் ஆகியவை மேற்கொள்ளப் படுகின்றன.
