/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.75 கோடி மதிப்பிலான போலி பேரிங்குகள் பறிமுதல்
/
ரூ.1.75 கோடி மதிப்பிலான போலி பேரிங்குகள் பறிமுதல்
ADDED : டிச 07, 2024 06:33 AM

கோவை; அக்டிபோலஜெட் எஸ்.கே.எப்., என்ற நிறுவனத்தின் பெயரில், போலியாக பேரிங்குகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக, நிறுவனத்தினருக்கு தகவல் சென்றது. நிறுவனத்தின் அதிகாரிகள் கோவை வந்து, காட்டூர் பகுதியில் உள்ள கடைகளில் உள்ள, எஸ்.கே.எப்., பேரிங்குகளை வாங்கி பரிசோதித்தனர்.
அப்போது, காட்டூர் மற்றும் ராம்நகர் பகுதிகளில் செயல்படும் ஏழு கடைகளில் அசல் எஸ்.கே.எப்., பேரிங்குகள் போலவே, போலி பேரிங்குகள் தயார் செய்து, எஸ்.கே.எப்., பிராண்ட் அச்சிட்ட பெட்டிகளில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. நிறுவனத்தின் அதிகாரி அனுஷ்க் அம்ரித் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, சுமார், ரூ.1.75 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் போலி பேரிங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். எஸ்.கே.எப்., நிறுவனத்தின் லோகோவை அச்சிட பயன்படுத்திய, இரண்டு லேசர் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.