/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் தானம் செய்தவர் குடும்பம் கவுரவிப்பு
/
உடல் தானம் செய்தவர் குடும்பம் கவுரவிப்பு
ADDED : ஏப் 16, 2025 10:06 PM

அன்னுார்; உடல் தானம் செய்தவரின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
அன்னுாரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் முத்துசாமி, 78. இவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலை காலமானார்.
இதையடுத்து அவரது கண்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. அன்னுார் ரோட்டரி சங்கத்தினர், முத்துசாமியின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று, தானமாக, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
கண் தானம் மற்றும் உடல் தானம் செய்த முத்துசாமியின் குடும்பத்தினருக்கு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்து, கவுரவித்தனர்.
அன்னுார் ரோட்டரி சங்கத்தின் ஏற்பாட்டில் 100வது கண் தானம் வழங்கப்பட்டுள்ளது.