/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடும்பம் சிறக்க, மக்கள் தொகை சீராக... மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி

ADDED : ஜூலை 12, 2025 01:08 AM

கோவை; கோவையில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, சபர்பன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும், பிரச்னைகள் குறித்தவிழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில், உலக மக்கள் தொகை தினம், ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி(நேற்று) கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, 36வது உலக மக்கள் தொகை தினம், நேற்று கடைபிடிக்கப்பட்டது. இத்தினத்தையொட்டி, சபர்பன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
பள்ளி முதல்வர் ஹேமா கார்த்திக் தலைமையில்,சமூக அறிவியல் துறை சார்பாக நடைபெற்ற இந்தபேரணியில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை சேர்ந்த, 360 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ராஜாஜி சாலையில் தொடங்கிய, இந்த விழிப்புணர்வு பேரணியை, காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற பேரணியில், 'குடும்பம் சிறக்க, மக்கள் தொகை சீராக', 'வளமான குடும்பம், வளமான பூமி', 'சிறு குடும்பம், பேருவகை' என்ற வாசகங்களுடன், பதாகைகளை ஏந்திய மாணவர்கள், கோஷங்கள் எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.