/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயி மூளைச்சாவு; 5 பேருக்கு மறுவாழ்வு
/
விவசாயி மூளைச்சாவு; 5 பேருக்கு மறுவாழ்வு
ADDED : அக் 03, 2025 09:40 PM
கோவை; திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயதான விவசாயி ராமசாமி, கடந்த மாதம் 28ம் தேதி அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்த அவருக்கு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,
தீவிர சிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 30ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது மனைவி ஆனந்தநாயகி, மகன்கள் சிபிசக்கரவர்த்தி, பூங்கபிலன் ஆகியோர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன், அவரது கல்லீரல், கண்கள், தோல் மற்றும் எலும்புஆகியவை தானமாக பெறப்பட்டன. கல்லீரல் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளால், ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
கே.எம்.சி.ஹெச்.,தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி கூறுகையில், ''பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து, அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதன் வாயிலாக, பலரது உயிரைக் காப்பாற்ற உதவும்,'' என்றார்.