/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விபத்தில்லா கோவை' உருவாக்க மக்கள் கூடுமிடங்களில் போஸ்டர்
/
'விபத்தில்லா கோவை' உருவாக்க மக்கள் கூடுமிடங்களில் போஸ்டர்
'விபத்தில்லா கோவை' உருவாக்க மக்கள் கூடுமிடங்களில் போஸ்டர்
'விபத்தில்லா கோவை' உருவாக்க மக்கள் கூடுமிடங்களில் போஸ்டர்
ADDED : அக் 03, 2025 09:39 PM

கோவை:கோவையில் வாகன விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதை தவிர்க்க 'உயிர்' அமைப்பு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசார், உயிர் அமைப்பு சார்பில், 'நான் உயிர் காவலன்' எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
முக்கிய அம்சமாக, 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வைத்தல், அக். 6 முதல் 12 வரை 'விபத்தில்லா கோவை' எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சாலை பாதுகாப்பு, அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களை உறுதிமொழி ஏற்க வைத்தல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் சாலை பாதுகாப்பு மற்றும் உறுதிமொழி குறித்த விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அபார்ட்மென்ட்கள், வணிக வளாகங்கள், கல்லுாரிகள், பள்ளிகள், சுகாதார துறை, உள்ளாட்சி நிர்வாகத்தினர், போக்குவரத்து போலீஸ், சாலை பராமரிப்பு, அரசு போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து துறை, அரசு மருத்துவமனை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த இடங்களில், விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.