/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகள் கொலை; விவசாயிகள் ஆலோசனை
/
காட்டுப்பன்றிகள் கொலை; விவசாயிகள் ஆலோசனை
ADDED : செப் 16, 2025 10:15 PM
மேட்டுப்பாளையம்; சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் பிரச்னைக்காக, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக காரமடை அருகே வெள்ளியங்காட்டில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து, மாநில தலைவர் வேணுகோபால் கூறியதாவது:-
வெள்ளியங்காடு அருகே சுண்டக்கொரை பகுதியில் அண்மையில் ஆடுகளை சிறுத்தை கொன்றது. இப்பகுதியில் பல வருடங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அவ்வபோது ஆடு, மாடு, தெரு நாய்களை வேட்டையாடி வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இதனால் விவசாயிகள் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாமல் விற்க துவங்கி விட்டனர். காரமடை வனத்துறை சார்பில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தும் கூட பிடித்து தீர்வு காண முடியவில்லை.
மேலும், விளைநிலங்களுக்குள் வருகின்ற காட்டுப்பன்றிகள் விவசாயிகளே அடித்துக் கொள்வதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.