/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல பயிர் சாகுபடி முறை விவசாயிகள் தீவிரம்
/
பல பயிர் சாகுபடி முறை விவசாயிகள் தீவிரம்
ADDED : ஆக 28, 2025 10:54 PM

நெகமம்,; நெகமம், தேவணாம்பாளையத்தில் பல பயிர் சாகுபடியை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்று வட்டாரத்தில் அதிகளவு தென்னை சாகுபடி உள்ளது. இதற்கு அடுத்த படியாக பயிர் வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. சில விவசாயிகள் பல பயிர் சாகுபடியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதில், தேவணாம்பாளையத்தில் விவசாயி கிருஷ்ணகுமார், அரை ஏக்கரில் பல பயிர் சாகுபடி முறையை கையாள்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: அரை ஏக்கர் நிலத்தில், உளுந்து, பாசிப்பயறு, கம்பு, தட்டைப்பயிறு என நான்கு பயிர்களை ஆடி பட்டத்தில் இயற்கை உரத்துடன் உழவு செய்து விதைத்துள்ளோம்.
பயிர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும், இது இரு வித்திலை தாவரம் என்பதால் வேர் முடிச்சுகளில் நைட்ரஜன் சத்து மண்ணில் இருக்கும். இதனால் மண்ணின் நுண்ணூட்டம் பெருகும்.
பயிர்கள் வளர உரங்கள் தேவைப்படாது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே உரம் பயன்படுத்துவோம். கார்த்திகை பட்டத்தில் அறுவடை துவங்கும்.
இதில், கம்பு பயிர் மட்டும் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவோம். மற்ற பயிர்கள் அனைத்தும் சொந்த தேவைக்கும், விற்பனைக்கும் பயிரிட்டுள்ளோம். இப்பகுதியில், மயில் தொல்லை அதிகம் இருப்பதால், அரை ஏக்கரில் மட்டும் விதைப்பு செய்துள்ளோம்.
இவ்வாறு, கூறினார்.

