/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு; உழவர் சங்கம் கோரிக்கை
/
செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு; உழவர் சங்கம் கோரிக்கை
செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு; உழவர் சங்கம் கோரிக்கை
செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு; உழவர் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2025 11:58 PM

மேட்டுப்பாளையம்; நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பயிர் செய்து வரும், 'செங்காம்பு கறிவேப்பிலைக்கு' புவிசார் குறியீடு வழங்க வேண்டும், என, அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், காரமடை, சிறுமுகை மற்றும் சுற்றுப்பகுதிகளில், செங்காம்பு கறிவேப்பிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து காரமடை அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் முத்துசாமி கூறியதாவது: அரங்கநாதர் உற்பத்தியாளர் குழுவில், 1020 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 75 சதவீதம் விவசாயிகள் கறிவேப்பிலை பயிர் செய்து உள்ளனர்.செங்காம்பு கறிவேப்பிலை நல்ல மணமும், சுவையும் இருப்பதால், பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
தற்போது காரமடை, சிறுமுகை மற்றும் சுற்றுப்பகுதியில், 2400 ஏக்கருக்கு மேல் கறிவேப்பிலையை பயிர் செய்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இதை வாங்கிச் செல்கின்றனர்.
100 ஆண்டுகளாக பயிர் செய்து வரும், செங்காம்பு கறிவேப்பிலைக்கு, 'புவிசார் குறியீடு' வழங்க கோரி அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியுடன் இணைந்து, அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு, புவிசார் குறியீடு பெறுவதற்கு தேவையான அனைத்து பதிவுகளையும் செய்துள்ளோம்.
மத்திய அரசின் ஆய்வுக்கு சென்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.