/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வேளாண் காடு வளர்ப்பால் விவசாயிகள் லாபம் ஈட்டலாம்'
/
'வேளாண் காடு வளர்ப்பால் விவசாயிகள் லாபம் ஈட்டலாம்'
'வேளாண் காடு வளர்ப்பால் விவசாயிகள் லாபம் ஈட்டலாம்'
'வேளாண் காடு வளர்ப்பால் விவசாயிகள் லாபம் ஈட்டலாம்'
ADDED : ஜூலை 18, 2025 09:40 PM
கோவை; கோவை, வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், 'பல் பயன்தரும் வேளாண் காடுகள்' என்ற தலைப்பில், விவசாயிகள் மற்றும் துறை சார்ந்தவர்களுக்கு வேளாண் காடு வளர்ப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி நடக்கிறது. துவக்க விழாவுக்கு, வனமரபியல் மரப்பெருக்கு நிறுவன இயக்குநர் நாகராஜன் தலைமை வகித்தார்.
வேளாண் பல்கலை விரிவாக்கக் கல்வி இயக்குநர் முருகன் பேசியதாவது:
பசுமைப் புரட்சி நன்மை செய்திருந்தாலும், மண் மலடாகி இருக்கிறது. எனவே, உணவுப் பாதுகாப்பு என்பது, பாதுகாப்பான உணவு என மாறியிருக்கிறது.
மண், சுற்றுச்சூழல், கால்நடைகள், தண்ணீர் ஆகிய நான்கையும் பாதுகாப்பது வேளாண் காடு வளர்ப்பு.
குறு, சிறு விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் காடு வளர்ப்பு லாபகரமானது. கீரைகள் முதல் மரங்கள் வரை, அனைத்தையும் உள்ளடக்கியதே வேளாண் காடு வளர்ப்பு திட்டம்.
உணவுப் பயிர்கள், மலர் சாகுபடி, மரங்கள், தோட்டக்கலைப் பயிர்கள், நறுமணப் பயிர்கள், பழ மரங்கள், தேனீ வளர்ப்பு, கால்நடை என, தினசரி வருவாய் தருபவை, வாராந்திர வருவாய் தருபவை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருவாய் தருபவை என கலவையாக திட்டமிடப்பட்ட விவசாய முறைதான் வேளாண் காடு வளர்ப்பு. ஒரு பயிர் கை விட்டாலும் மற்றொரு பயிர் கை கொடுக்கும்.
மரங்கள் அடர்த்தியாக இருப்பதால், ஒரு ரிசார்ட் போன்றும் வடிவமைக்கலாம். நிம்மதியான சூழலோடு, வருவாயும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களே பணியைப் பார்த்துக் கொள்ளலாம். காலநிலை மாற்றத்துக்கும் உகந்தது.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்திய வன மரபியல் மரப்பெருக்கு நிறுவன விரிவாக்கப் பிரிவு தலைவர் கணேஷ் குமார், துணை வனப்பாதுகாவலர் (விரிவாக்கம்) மாதவராஜ், தலைமை தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.