/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1,400 ஏக்கர் நிலம் பறிபோகும் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
/
1,400 ஏக்கர் நிலம் பறிபோகும் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
1,400 ஏக்கர் நிலம் பறிபோகும் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
1,400 ஏக்கர் நிலம் பறிபோகும் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
ADDED : ஆக 29, 2025 10:25 PM
அன்னுார்; 'கோவை கிழக்கு புறவழிச்சாலையால் 1,400 ஏக்கர் நிலம் பறிபோகும்,' என, விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
குன்னத்தூர், காட்டம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், நேற்று கலெக்டர் பவன் குமாரிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது :
பல்லடம், சூலூர், அன்னுார் தாலுகாக்கள் வழியாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் மத்தம் பாளையம் அருகே இணையும்படி கிழக்கு புறவழிச் சாலை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிஜிட்டல் சர்வே செய்யப்பட்டு, மார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள், நில உரிமையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையிடம் விசாரித்தும் விபரம் பெற முடியவில்லை. கோவை நகரை சுற்றி ஏராளமான இணைப்பு சாலைகள் உள்ளன.
இந்த சாலைகளை அகலப்படுத்தி, மேம்படுத்தி, போக்குவரத்தை விரைவு படுத்தலாம். புதிதாக திட்டமிட்டுள்ள கிழக்கு புறவழிச் சாலையால் 1,400 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகும். அத்திக்கடவு திட்டத்தால் தற்போது அன்னுார் தாலுகாவில் பல குளம் குட்டைகளில் நீர் நிரம்பி விவசாயம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அரசே விவசாய நிலத்தை பறிப்பது நியாயமல்ல. எனவே மத்திய, மாநில அரசுகள் கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும்.
இத்திட்டத்தின் முழு விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.