/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரத்துக்கு பதிலாக ஹியூமிக் அமிலம்; விவசாயிகள் கோரிக்கை
/
உரத்துக்கு பதிலாக ஹியூமிக் அமிலம்; விவசாயிகள் கோரிக்கை
உரத்துக்கு பதிலாக ஹியூமிக் அமிலம்; விவசாயிகள் கோரிக்கை
உரத்துக்கு பதிலாக ஹியூமிக் அமிலம்; விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 20, 2025 06:15 AM
கருமத்தம்பட்டி: விவசாய தேவைகளுக்கு உரத்துக்கு மாற்றாக, ஹியூமிக் அமிலம் வழங்க வேண்டும், என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உரங்கள் பற்றாக்குறையால், விவசாயத்துக்கு தேவையான நேரத்தில் உரங்கள் கிடைப்பதில்லை. அதனால், உரத்துக்கு மாற்றாக இருக்கும் ஊட்டசத்துகள் கிடைத்தால் பயிர் வளர்ச்சி தடைபடாமல் இருக்கும், என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.
இதுகுறித்து விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது:
விவசாயத்துக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கால்நடை வளர்ப்பு குறைந்து வருகிறது. இதனால், இயற்கையாக கிடைக்கும் உரங்கள் கிடைப்பதில்லை. அதனால், ரசாயன உரத்தை நாடவேண்டி உள்ளது. மண்ணில் உள்ள நூண்ணுயிரிகளின் செயல்பாட்டுக்கு கார்பன் தேவைப்படுகிறது. அது, உரத்தின் மூலமே கிடைக்கிறது.
உரங்கள் தேவையான அளவு கிடைக்காத போது, ஹியூமிக் அமிலம் பயன்படுத்தலாம். அதன்மூலம் மண்ணில் கார்பன் தக்கவைக்க முடியும்.
வெளி சந்தைகளில் பல தரங்களில், பல விலைகளில் ஹியூமிக் அமிலம் கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் தயங்கும் நிலை உள்ளது.
அதனால், உரத்துக்கு மாற்றாக உள்ள இந்த அமிலத்தை மத்திய, மாநில அரசுகள் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.