/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விவசாயிகளே... ஆன்லைனில் உரம் வாங்காதீர்'
/
'விவசாயிகளே... ஆன்லைனில் உரம் வாங்காதீர்'
ADDED : நவ 07, 2025 09:32 PM
கோவை: வேளாண் இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி அறிக்கை:
உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி, ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய வழிவகை இல்லை. எனவே, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்படும் உரங்கள் தரமானதா என்பதை உறுதிப்படுத்த இயலாது. இதன் விலையும் அதிகமாக இருக்கும்.
ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை ஆன்லைன் வாயிலாகவோ அல்லது தோட்டங்களுக்கு நேரில் வந்து விற்பனை செய்யும் ஏஜண்டுகளிடம், வேளாண் துறை வழங்கும் உர உரிமம் கிடையாது. இவ்வாறு, உரிமம் பெறாமல் ஆன்லைனில் உர விற்பனை செய்வது சட்டவிரோதம்.
இந்த உரங்களை வாங்கிப் பயன்படுத்துவதால், சாகுபடி செலவு அதிகமாவதுடன், மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, நகர்ப்புற மாடித்தோட்ட காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆன்லைன் உர விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் குறைவான விலையில், தரமான இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கி பயனடையலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

