/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 04, 2025 11:24 PM

வால்பாறை; வால்பாறையில் தொடர்ந்து பெய்யும் கோடைமழையால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணைகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் பெறப்படும் மழை நீர், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்துவற்காக, மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு அணைகளில் தேக்கப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையில் நான்கு மாதங்களுக்கு பின், கடந்த இருவாரங்களாக கோடை மழை பரவலாக பெய்கிறது. தொடர்ந்து பெய்யும் மழையால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமவெளிப்பகுதியிலும் பரவலாக மழை பெய்கிறது. விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட சமவெளிப்பகுதியிலும் பரவலாக மழை பெய்கிறது. இதனால், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.
வறட்சியின் பிடியில் இருந்து, வால்பாறை தப்பியதால் வனத்துறை அதிகாரிகளும், கோடை மழையில் தேயிலை மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளதால், தேயிலை விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா பயணியர் வருகையும் அதிகரித்துள்ளது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): வால்பாறை -14, சோலையாறு - 26, பரம்பிக்குளம் - 30, ஆழியாறு - 7, மேல்நீராறு - 5, கீழ்நீராறு - 5, காடம்பாறை - 10, மேல்ஆழியாறு - 3, மணக்கடவு - 6, துணக்கடவு - 24, பெருவாரிப்பள்ளம் - 20, நவமலை - 8, பொள்ளாச்சி -103, என்ற அளவில் மழை பெய்தது.