/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய்க்கு கூடுதல் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
தேங்காய்க்கு கூடுதல் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 21, 2025 11:16 PM
சூலுார்; சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:
சூலுார் திருச்சி ரோட்டில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும் தேங்காய், தேங்காய் கொப்பரை உள்ளிட்ட விளை பொருட்கள் ஏலம் நடக்கிறது.
குறிப்பாக, தேங்காய் மற்றும் தேங்காய் கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கிறது. எந்த இடைத்தரகு கமிஷனும் தரத் தேவையில்லை. கடந்த வாரம், தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக, 65 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, கிலோ ஒன்றுக்கு, 58 ரூபாய்க்கும் ஏலம் போனது.
விற்பனை செய்ய முடியாவிட்டால், விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம். இருப்பு வைக்கும் பொருட்களுக்கு குறைந்த வட்டியில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது.
தேங்காய்களுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.