/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர்கள் அறுவடை பணி: விவசாயிகள் தீவிரம்
/
பயிர்கள் அறுவடை பணி: விவசாயிகள் தீவிரம்
ADDED : ஜன 09, 2024 12:18 AM
உடுமலை;புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த சோளம், மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டி உள்ளது. இதனால், பொங்கல் பண்டிகைக்குள் அறுவடையை முடிக்க, விவசாயிகள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், சோளம் அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இயந்திரங்களின் உதவியுடன், பல விவசாயிகள் அறுவடையை துவக்கி உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: சோளம் பெரும்பாலும் கோழி மற்றும் மாட்டு தீவனத்திற்காகவே சாகுபடி செய்யப்படுகிறது. மக்காச்சோளம், ஒரு கிலோ தற்போது, 23.50 வரை ரூபாய்க்கு விலை போகிறது. அதாவது, மக்காச்சோளம் கடந்த ஆண்டு விற்பனையான விலைக்கே, இந்த ஆண்டும் விலை போகிறது. ஆண்டுதோறும் கூலி மற்றும் இடுபொருட்கள் விலை அதிகரித்தும் வருகிறது.
இருப்பினும், மக்காச்சோளம் விலை மட்டும் அதே நிலையில் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.