/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பந்தல் காய்கறி சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
/
பந்தல் காய்கறி சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
ADDED : மே 29, 2025 11:15 PM
கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு சுற்று பகுதியில் பந்தல் காய்கறி மற்றும் வெண்டை நாற்று நடவு துவங்கியுள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால், விவசாயிகள் காய்கறி மற்றும் பந்தல் வகை பயிர் நடவு செய்ய துவங்கி உள்ளார்கள்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், வாழை, தக்காளி, வெண்டைக்காய் மற்றும் பந்தல் காய்கறிகள் நான்காயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
தற்போது, வடபுதூர் மற்றும் சுற்று பகுதியில் உள்ள விவசாயிகள் வெண்டைக்காய் பயிர் சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். இதேபோன்று, மெட்டுவாவி மற்றும் பனப்பட்டி பகுதிகளில், புடலை உள்ளிட்ட பந்தல் வகை காய்கறிகள் சாகுபடியை துவங்கியுள்ளனர்.