/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானியத்தில் சொட்டுநீர் பாசனம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
/
மானியத்தில் சொட்டுநீர் பாசனம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
மானியத்தில் சொட்டுநீர் பாசனம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
மானியத்தில் சொட்டுநீர் பாசனம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : ஜூலை 27, 2025 09:24 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில், சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப் படுகிறது.
பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி அறிக்கை:
இன்றைய காலத்தில், விவசாயத்துக்கு சொட்டுநீர் பாசனம் மிகவும் அவசியம். பயிருக்கு தேவையான அளவில் நீர் வழங்குவது சொட்டு நீர் பாசன அமைப்பு வாயிலாக ஏதுவாகிறது.
இந்த முறையில், 60 முதல், 80 சதவீதம் நீர் பயன்பாட்டுத்திறன் அதிகரிக்கும். பயிர் விளைச்சல், 20 முதல், 50 சதவீதம் அதிகரிப்பு, பயிருக்கு தேவையான உரங்களை பாசன நீருடன் கலந்து அளிக்கலாம். களைச்செடிகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.
அனைத்து விதமான காய்கறி பயிர்கள், பல பயிர்கள், தென்னை, தென்னையில் ஊடுபயிராக பயிரிடப்படும் அனைத்து பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம்.
சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியமாக மேலாண்மை திட்டத்தில் தானியங்கி அமைப்பு அல்லது ஆட்டோமேசன் நிறுவிட வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறைக்கு, 300 ெஹக்டேர் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள், போட்டோ, ரேஷன் கார்டு, சிட்டா, அடங்கல், வயல் வரைபடம் ஆகியவற்றுடன் பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.