/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நொய்யல் சீரமைப்பு திட்டத்துக்கு விவசாயிகளிடம் கருத்து கேட்கணும்'
/
'நொய்யல் சீரமைப்பு திட்டத்துக்கு விவசாயிகளிடம் கருத்து கேட்கணும்'
'நொய்யல் சீரமைப்பு திட்டத்துக்கு விவசாயிகளிடம் கருத்து கேட்கணும்'
'நொய்யல் சீரமைப்பு திட்டத்துக்கு விவசாயிகளிடம் கருத்து கேட்கணும்'
ADDED : அக் 19, 2025 09:27 PM
கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்குள் 18.56 கி.மீ., துாரத்துக்கு நொய்யல் ஆறு பயணிக்கிறது. ரூ.200 கோடியில் மறுசீரமைப்பு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இரு கரைகளையும் பலப்படுத்தி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது.
இத்திட்ட விளக்க கூட்டம் மற்றும் கருத்து கேட்பு கூட்டம், சமீபத்தில் போத்தனுாரில் நடந்தது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். விவசாயிகள் சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கவில்லை.
ஆத்துப்பாலத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வரையிலான பகுதியில், விவசாய பகுதிகள் உள்ளன. அதனால், விவசாயிகள் பங்கேற்கும் வகையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நொய்யல் ஆறு மறுசீரமைப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், விவசாயிகள் சங்கங்களுக்கு தெரிவிக்கப்படாமல் நடத்தப்பட்டுள்ளது. ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்வும், அனைத்து குளங்களிலும் நொய்யல் நீரை நீரப்பவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அனைத்து விவசாயிகள் சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து, மீண்டும் ஒரு முறை ஆலோசனை கூட்டத்தை நடத்தி, கருத்துக்களை கேட்டறிந்து, சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, கூறியுள்ளார்.