/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீரர்
/
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீரர்
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீரர்
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீரர்
ADDED : ஜூலை 09, 2025 10:26 PM

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், முதலாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. கோவை டஸ்கர்ஸ் அணியும், ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின.
மழை காரணமாக போட்டிக்கான ஓவர்கள், 41 ஆக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த கோவை டஸ்கர்ஸ் அணி, 40.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 191 ரன்கள் எடுத்தனர். வீரர் அபிலாஷ், 55 ரன்களும், சல்மான் கான், 47 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் கார்த்திகேயன், 9 விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய, ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியினர், 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 190 ரன்கள் எடுத்தனர்.
வீரர் சரவணன், 59 ரன்களும், பொன்முரளி கிருஷ்ணன், 41 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் கிருபாகர் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
மூன்றாவது டிவிஷன் போட்டியில், கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணியும், யங் பிரண்ட்ஸ் சி.சி., அணியும் மோதின. பேட்டிங் செய்த கோவை லெஜண்ட் அணியினர், 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 192 ரன்கள் எடுத்தனர்.
வீரர் நவீன், 54 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் ரூபக் குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய யங் பிரண்ட்ஸ் அணியினர், 47.1 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 195 ரன்கள் எடுத்தனர்.
வீரர் முத்துகுமார், 62 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் சதீஷ்குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.