/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அற்புத குழந்தை இயேசு திருத்தல பெருவிழா
/
அற்புத குழந்தை இயேசு திருத்தல பெருவிழா
ADDED : ஜன 15, 2024 01:25 AM

போத்தனூர்;கோவைபுதூரிலுள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தல பெருவிழா முன்னிட்டு, தேர் பவனி நேற்று நடந்தது.
விழா கடந்த 4ல் திருப்பலி, கூட்டுப்பாடல் திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வந்த நாட்களில், திருப்பலி மற்றும் மறையுரை நடந்தன.
நேற்று காலை, 6:30 மணிக்கு திருப்பலி திருத்தல குருக்களால் நடத்தப்பட்டது. 8:00 மணிக்கு சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடந்தது.
இதையடுத்து காலை, 10:00 முதல் திருப்பலி ஜெரோம், கிறிஸ்து ராஜாமணி, மார்டின் ஜோஸ், ராயப்தாஸ், ஜெகன் ஆன்டனி, வின்சென்ட் பால், ரொசாரியோ வினோத், ஆன்டனி சேவியர் பயஸ் மற்றும் தோழமை குருக்கள் இரவு, 7:30 மணி வரை நடத்தினர்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், அற்புத குழந்தை இயேசு திரு உருவத்துடன், நூற்றுக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.
ஆன்டனி பெலிக்ஸ், டேவிட் அலெக்சாண்டர் நன்றி ஆராதனை நடத்தினர். ஏற்பாடுகளை, ஆலய பங்கு தந்தை ஆன்டனி வினோத், உதவி பங்கு தந்தை ஜானி சகாயராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.