/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றை கொல்வதற்கு சமம்
/
குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றை கொல்வதற்கு சமம்
குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றை கொல்வதற்கு சமம்
குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றை கொல்வதற்கு சமம்
ADDED : நவ 14, 2025 10:53 PM
மேட்டுப்பாளையம்: சுற்றுலா பயணிகள் சாலையில் சுற்றி திரியும் குரங்குகளுக்கு உணவளிக்க கூடாது என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் உள்ள இடங்களில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும், உணவு சாப்பிடவும் வாகனங்களை நிறுத்துகின்றனர். சிலர் சாலையோரம் சுற்றி திரியும் குரங்களை பார்க்கவும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இவர்களில் சிலர் தங்களது வாகனத்திற்கு அருகில் வரும் குரங்களுக்கு உணவளிக்கின்றனர். இதனால், உணவுக்காக, சாலையில் சுற்றி திரியும் குரங்குகளால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், 'குரங்களுக்கு உணவளிப்போரை கண்காணிக்க வனத்துறை தீவிர ரோந்து மேற்கொள்கிறது. வனச்சட்டத்தின் படி குரங் குகளுக்கு உணவளிக்கக்கூடாது. அவற் றுக்கு இயற்கையாகவே வனத்தில் உணவு கிடைக்கும்.
இவ்வாறு மக்கள் உணவளிப்பதால் குரங்ககள் வனத்துக்குள் செல்லாமல், சாலையிலேயே சுற்றி திரிகின்றன. இதனால் விபத்தில் சிக்கி காயம் அடையவும், உயிரிழக்கவும் செய்கின்றன. குரங்களுக்கு உணவளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவளிப்பது அவற்றை கொல்வதற்கு சமம்' என்றனர்.

