UPDATED : அக் 27, 2026 05:41 PM
ADDED : அக் 27, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
கோவை: விவசாயத்துக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள், பாமணி கலப்பு உரங்கள், வேப்பம் விதைத்தூள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச் சத்து உரங்கள், நீரில் கரையும் உரங்கள் உள்ளிட்டவற்றை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் நில உரிமை ஆவணங்களை சமர்ப்பித்து உரங்களை பெறலாம். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகளும் உறுப்பினராக இணைந்து, குறைந்த வட்டியில் பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
