/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளை கடத்தி கொல்லப்போவதாக சினிமா தயாரிப்பாளருக்கு மிரட்டல்
/
மகளை கடத்தி கொல்லப்போவதாக சினிமா தயாரிப்பாளருக்கு மிரட்டல்
மகளை கடத்தி கொல்லப்போவதாக சினிமா தயாரிப்பாளருக்கு மிரட்டல்
மகளை கடத்தி கொல்லப்போவதாக சினிமா தயாரிப்பாளருக்கு மிரட்டல்
ADDED : செப் 07, 2025 11:07 PM
கோவை; கோவையைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார் ரெட்டி, 46; சினிமா தயாரிப்பாளர். கடந்தாண்டு மார்ச் மாதம், பேசஸ் என்ற மலையாள திரைப்படத்தை தயாரித்தார்.படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை, கேரள மாநிலம் கொச்சினில் உள்ள நிறுவனத்துக்கு கொடுத்தார். அதன்பின், ஜனவரியில் மனைவி லாவண்யாவுடன், லண்டன் சென்றார்.
இந்நிலையில், சஞ்சய்குமார் ரெட்டி இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து, பேசஸ் திரைப்படத்தை, கோவைபுதுாரைச் சேர்ந்த அங்காளம்மன் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்து, சென்சார் பணிகளை முடித்ததும்,திரைப்படத்தை ரூ.6 கோடிக்கு, வேறு ஒரு தயாரிப்பாளருக்கு விற்று, ரூ.20 லட்சம் முன்பணம் பெற்றதும், சஞ்சய்குமார் ரெட்டிக்கு தெரிந்தது.
கேரள டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தார். எர்ணாகுளம் பாலரிவட்டம் போலீசார், போலியான இறப்புச் சான்றிதழை பயன்படுத்தி, மோசடி செய்ததாக திரைப்பட இயக்குனர் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நீலேஷ், சலச்சித்திரம் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜேஷ், கோவைபுதூரை சேர்ந்த முருகேசன், திருச்சி பொன்மலையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
மோசடி ஆசாமிகள், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவும் தள்ளுபடியானது. இந்நிலையில், லண்டனில் உள்ள தயாரிப்பாளர் சஞ்சய்குமார்ரெட்டி மொபைல் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்தது. அதில் பேசியவர், குனியமுத்தூர் போலீசில் இருந்து பேசுவதாகவும், கேரளாவில் உள்ள வழக்கை வாபஸ் பெற மறுத்தால், அவரதுமகளை கடத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
சஞ்சய்குமார்ரெட்டி, தமிழக டி.ஜி.பி., கோவை கலெக்டர், கேரளா டி.ஜி.பி., பாலரிவட்டம் போலீசாருக்கு, இ-மெயிலில் புகார் அனுப்பினார். போலீசார் விசாரிக்கின்றனர்.