தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அதிவேக வாகனங்களுக்கு அபராதம்

அதிவேக வாகனங்களுக்கு அபராதம்

அதிவேக வாகனங்களுக்கு அபராதம்

1


UPDATED : நவ 10, 2026 09:29 AM

ADDED : நவ 10, 2026 09:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:29 AM ADDED : நவ 10, 2026 09:26 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுந்தராபுரம்:

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் ஸ்பீடு ஹன்ட்டர் எனும் ஏ.ஐ. காமிரா உதவியுடன் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

அவ்வகையில் நேற்று எல்.ஐ.சி. காலனி அடுத்து சிறிது தொலைவில் அதிவேகம், மது போதை, ஹெல்மெட் போடாதது, மூவர் பயணிப்பது போன்ற விதி மீறல்களுக்காக, 70 கார், இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (மேற்கு) பெரியசாமி மேற்பார்வையில், எஸ்.ஐ.கள் உதயகுமார், அன்பழகன், அருள்துரை சோதனை செய்தனர். சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் சாலையில் நடந்த சோதனையில் 60 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பெரியசாமி கூறுகையில் தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு செல்வோர், திரும்புவோர் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவர். இதனால் ஏற்படும் விபத்தினை தவிர்க்க, இச்சோதனை நடத்தப்பட்டது” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us