/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தீ
/
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தீ
ADDED : பிப் 16, 2024 02:29 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 5 முறை மேட்டுப்பாளையம் - கோவை இடையே ரயில் இயக்கப்படுகிறது.இது தவிர தினமும் சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் திருநெல்வேலிக்கு வாரம் ஒருமுறை சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இதற்காக தினமும் ஏராளமான பயணியர் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதற்கிடையே நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளர் அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனே மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதிகாலை நேரம் என்பதாலும் அறையில் யாரும் இல்லாததாலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும் அறை முழுவதும் சேதமானது. பேனல் போர்டுகள் உள்ளிட்ட இயந்திரங்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மாற்று அறையில் ரயில்களை இயக்க ஏற்பாடு செய்தனர். இதனால் ரயில் போக்குவரத்தில் தடை ஏற்படவில்லை.