/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கசிவால் வங்கியில் தீ; பொருட்கள் எரிந்து நாசம்
/
மின்கசிவால் வங்கியில் தீ; பொருட்கள் எரிந்து நாசம்
ADDED : ஜூன் 15, 2025 11:10 PM

தொண்டாமுத்தூர்; பேரூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் எரிந்து சாம்பலானது.
பேரூர், சிறுவாணி மெயின் ரோட்டில், பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று வங்கி விடுமுறை என்பதால், பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று, இவ்வங்கியில் இருந்து, கரும்புகை வந்துள்ளது. இதனைக்கண்டவர்கள், வங்கி பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த வங்கி பணியாளர்கள், வங்கியின் ஷட்டரை திறந்து பார்த்தபோது, வங்கி முழுவதும், தீப்பிடித்து, எரிந்து கொண்டிருந்தது.
வங்கி பணியாளர்களின் தகவலின் பேரில், தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார், 1 மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், வங்கியில் இருந்த கம்ப்யூட்டர், டேபிள், சேர்கள், ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக, பணம் மற்றும் நகைகள் வைத்திருந்த லாக்கர் பகுதியில், தீ பரவவில்லை. வங்கியில் இருந்த யூ.பி.எஸ்.,ல் மின் கசிவு ஏற்பட்டு, முக்கிய மின்சார பெட்டியில் தீப்பிடித்து, வங்கி முழுவதும் தீப்பரவியுள்ளதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.