ADDED : ஆக 27, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார், அவிநாசி சாலையில், வரதராஜ் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. நேற்று இரவு 9:00 மணிக்கு ஊழியர்கள் கடையை மூடி விட்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் கடையில் இருந்து அதிக அளவில் புகை வெளியானது. கடையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'டிவி', பிரிஜ், வாஷிங் மெஷின், உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்தன. தகவல் அறிந்து அன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைக்க நள்ளிரவு வரை போராடினர்.

